பிரபல இசை அமைப்பாளர் (சங்கர் ) கணேஷின் மகன் ஸ்ரீ. சீரியல் நடிகையை காதலித்து கல்யாணம் செய்திருக்கிறார்.
பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததோடு, பல திரைப்படங்களிலும் பல வேடங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை உலகில் தனக்கான தனி இடத்தை பிடித்திருப்பவர் தற்போது ‘பேராசை’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
சினிமாவுக்காக பல வருடங்கள் போராடி வெற்றி பெற்ற ஸ்ரீ, நினைத்திருந்தால் ரொம்ப எளிதாக சினிமாவுக்குள் ஹீரோவாக நுழைந்திருக்கலாம். காரணம், அவருடைய பின்னணி அப்படிப்பட்டது.
எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளரான ஜி.என்.வேலுமணியின் பேரன் என்ற அடையாளம் இருந்தும், அவற்றை எங்கேயும் காட்டிக்கொள்ளாமல் சினிமாவில் பயணித்து வருகிறார்.
தற்போது ஸ்ரீ ஹீரோவாக அறிமுகமாகும் ‘பேராசை’ திரைப்படம் மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லும் சமூகத்திற்கான படமாகவும், அதே சமயம், அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான கமர்ஷியல் திரைப்படமாகவும் உருவாகிறது.
ஈசன் மூவிஸ் சார்பில் சக்தி அருண் கேசவன், ஷிஹான் சரவணன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.