சிவாஜி வீட்டில் குஷ்பூ! வைரலாகும் புகைப்படங்கள்!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் இதற்காக கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டும் வருகிறார்.

இந்நிலையில்,நடிகை குஷ்பு திடீரென மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு விசிட் அடித்தவர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த நடிகர்திலகத்தின் மூத்தமகன் ராம்குமாருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு தான் வெற்றி பெற வாழ்த்தும்படியும் கூறி ஆசி பெற்று திரும்பியுள்ளார்.

சிவாஜி வீட்டில் பிரபு, ராம்குமார் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.