எனது தேவை அரசியலுக்குத் தேவையா என யோசித்துப் பார்க்காமலேயே இருந்தது என்னுடைய தவறுதான். அதே தவறைப் பலரும் செய்துள்ளார்கள். அரசியல் வருகையை முன்பே செய்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும், தற்போதாவது அரசியலுக்குள் வந்தேனே என்பதை நினைத்து மகிழ்ச்சிதான்.அரசியலில் எனக்கு மிரட்டல்கள் வந்தன. ஆனால், அதற்கெல்லாம் எனக்கு எந்தப் பயமும் கிடையாது. அனைத்துக்கும் தயாராகத்தான் இங்கே வந்திருக்கிறேன். மிரட்டலுக்கெல்லாம் இங்கு இடம் கிடையாது.
என்னுடைய வாழ்க்கையின் எஞ்சிய நாட்களை மக்களுக்காக என முடிவு செய்துவிட்டேன். அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், சினிமாவில் ஏன் நடிக்கிறேன் என்றால், அது என்னுடைய தொழில். பிறர் தயவில் வாழக் கூடாது என்பதற்காகத் தொடர்ந்து அந்த வேலையைச் செய்வேன். அதே நேரம் சினிமா எனது அரசியலுக்கு இடைஞ்சலாக இருந்தால், அதை நிறுத்திவிடுவேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.