இதையடுத்து கவுதம்மேனன் இயக்கும் திரைப்படம் ஒன்றிலும் சிம்பு நடிக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் உடன் சிம்பு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள லிப்ரா ரவீந்திரன்,அதற்கு கேப்சனாக ‘பார்த்தா தெரியுறது நடிப்பு. பழகினால் தான் தெரியும் நட்பு.இவர் மேல சில பேருக்கு வெறுப்பு.அதற்கு அவர் இல்லை பொறுப்பு’ என்று கவிதை வடிவில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். இதையடுத்து லிப்ரா பட நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடிக்க உள்ளதாக இணையதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது.