அடுத்த ஒரு சில நாட்களில் ரஜினி சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விடும் என்கிறது படக்குழு. இந்நிலையில், ரஜினியுடன் நயன்தாரா நடிக்கும் சில காட்சிகள் நாளை முதல் படமாக்கப்பட வேண்டியுள்ளதால் நயன்தாரா இன்று அவசரஅவசரமாக ஐதராபாத்துக்கு வழக்கம் போல் தனி விமானம் மூலம் சென்றுள்ளார்.
ஐதராபாத் விமான நிலையத்தில் நயன்தாரா விமானத்தில் இருந்து இறங்கி நடந்து செல்லும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.இம்முறை அவரை நிழல் போல் தொடரும் காதலர் விக்கி மிஸ்ஸிங்… என்னம்மா…தலைவர் படம் என்றதும் விக்கியை கழட்டி விட்டாச்சா ….என்றும் சில நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இப்படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், உள்பட மெகா நட்சத்திர பட்டாளமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.