திமுக வசமாகிறது தமிழ்நாடு!தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஏற்படுத்திய பரபரப்பு!!

 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.. அசாமில் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில்,  பல போராட்டங்களுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடந்தது.கொரோனா எப்போது ஒழியும் என்பதைவிட, தமிழகத்தில் இம்முறை ஆட்சியை பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு தான் மக்களிடையே ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது. 

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவில் இம்முறை அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக – தேமுதிக, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை யாக பிரிந்து கள்த்தில் போட்டியிட்டாலும். இதில் அதிமுக – திமுக இடையே தான் கடுமையான போட்டி என்றே கூறலாம்.

இந்நிலையில் பல்வேறு நிறுவனங்கள், ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும் பாலும் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என்றே முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

தற்போது ‘இந்தியா அஹெட்’ நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு விவரத்தின்படி தமிழகத்தில் திமுக கூட்டணி 165 முதல்190 தொகுதிகள் வரை கைப்பற்றி அமோகமாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணிக்கு வெறும் 40 தொகுதிகள் முதல் 60 தொகுதிகள் வரையே கிடைக்கும் என்கிறது.

வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை திமுக கூட்டனிக்கு 45% முதல் 48% சதவீதம் கிடைக்கும் என்றும் கணித்துள்ளது. அந்த கருத்துக்கணிப்பு பட்டியல் விபரத்தை முதலில் பார்ப்போம்…

திமுக கூட்டணி – 165-190 தொகுதிகள்

அதிமுக கூட்டணி – 40-65 தொகுதிகள்

அமமுக – 1-3 தொகுதிகள்

மக்கள் நீதி மய்யம் – 1-3 தொகுதிகள்

மற்றவை – 0-3 தொகுதிகள்

இதன்படி, திமுக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றும் என இந்தக் கருத்துக்கணிப்பு  தெரிவிக்கிறது.

வாக்கு சதவீதம்:

திமுக கூட்டணி – 45-48%

அதிமுக கூட்டணி – 35-38%

மநீம – 4-5%

அமமுக – 3-4%

மற்றவை – 10-12%

இதையடுத்து ‘டுடே சாணக்கியா’ – நியூஸ் 24 செய்தி நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவை பார்க்கலாம்.:

திமுக கூட்டணி – 175 தொகுதிகள்

அதிமுக கூட்டணி – 57 தொகுதிகள்

மற்றவை – 2 தொகுதிகள்

வாக்கு சதவீதம்:

திமுக கூட்டணி 51%

அதிமுக கூட்டணி – 37%

மற்றவை – 12%

இதன்படி, திமுக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றும் என, இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

புதுச்சேரியை பொறுத்தவரை  என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியே   அமையும் என்றும்,   என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு 16 – 20 தொகுதிகளும்,  திமுக -காங்கிரஸ் கூட்டணிக்கு  11 -13 இடங்களே கிடைக்கும் என்றும்  ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.