நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம் !

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.மேலும், இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, தயாரிப்பாளர் பாபுராஜா ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கும் நிலையில் பாடகர் கோமகன்,நடிகர் பாண்டு,ஜோக்கர் துளசி,கொரோனாவால் உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர வைத்திருக்கிறது. இந்நிலையில் பிரபல  நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா (வயது 60) அவரது சொந்த ஊர் பணகுடியில் இன்று மாலை  6 மணி அளவில் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நாளை நண்பகல் நடக்க உள்ளது.நெல்லை சிவா இது வரை திருமணம் செய்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை சிவாவின் மறைவு திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.