இந்நிலையில் சற்று முன் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவரும், மறைந்த இயக்குனர் ராமநாராயனின் மகனுமான தேனாண்டாள் முரளி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது குறித்து மருத்துவமனை வட்டாரம் கூறுகையில், அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளபடவுள்ளதாகவும் தெரிவிக்கிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி விரைவில் குணமாக வேண்டும் என திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தேனாண்டாள் முரளிக்கு இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு நீக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் தற்போது நலமுடன் உள்ளார் என்றும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அவரது பி.ஆர்.ஓ.விஜயமுரளி தெரிவித்துளார்.