பரமேஸ்வரா ஆர்ட்ஸ் பட நிறுவனம், தெலுங்கில் ஆஞ்சநேயலு என்ற பெயரில் வெளியான படத்தை, தமிழில் .அதிரடி அர்ஜுன். என்ற பெயரில் உருவாக்கி வருகிறது. இதில்,நயன் தாரா அதிரடி ஆக்சனுடன் கவர்ச்சிநாயகியாகஅசத்தியுள்ளார்.இவருடன்,பிரகாஷ் ராஜ்,ரவிதேஜா,நாசர்,சுமன்,அருந்ததி சோனு, கோட்டா சீனிவாசராவ்,ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள பரசுராம் கூறியதாவது, முறைகேடுகள் செய்து சம்பாதித்த அரசியல் வாதிகளின் முகமூடிகளை கிழித்து அம்பலமாக்க முயற்சி செய்யும் ஒருவர் படுபயங்கரமாக கொலை செய்யப்படுகிறார்.அவருடன் அப்பாவி களான கதாநாயகனின் தாய்,தந்தையும் தீயிட்டு கொளுத்தப்படுகின்றனர்.பெற்றோர்களை தீக்கிரையாக்கிய வில்லன்களை பழிவாங்க கதாநாயகனும்,கதாநாயகி நயன்தாராவும் வில்லன்களின் உதவியாளர்கள் போல் நடித்து தக்க தருணத்தில் பழி வாங்குவதே கதைக்களம். இப்படத்தை பிரிமியர் பிலிம்ஸ் படநிறுவனம் வரும் ஏப்ரல் 22 ந்தேதி வெளியிடுகிறது என்கிறார்