தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான நடிகர் அல்லு அர்ஜூன். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , வீட்டிலேயே ஒரு பகுதியில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைப் படி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,15 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு கொரோனா நெகட்டிவ் என் தனக்கு ரிசல்ட் வந்து விட்டதாகவும்,கொரோனாவில் இருந்து தற்போது முழுவதுமாய் மீண்டு விட்டதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், 15 நாட்கள் தனிமைக்கு பின்னர் வீட்டுக்குள் நுழையும் அவர் தனது மகனையும், மகளையும் கட்டியணைத்து ,அள்ளிக்கொஞ்சி பாசத்துடன் கட்டியணைத்து முத்தமிடும் உணர்ச்சிகரமான வீடியோ காட்சி ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Meeting family after testing negative and 15 days of quarantine. Missed the kids soo much 🖤 pic.twitter.com/ubrBGI2mER
— Allu Arjun (@alluarjun) May 12, 2021