பிரபல பாலிவுட் நடிகை அமைரா தஸ்தூர்,தனது சமூக வலைதளத்தில், “நாட்டில் அனைவருக்கும் சரியான மருத்துவ வசதி என்றும், கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தப்பிக்க போதுமான மருத்துவ படுக்கைகள், ஆக்ஸிஜன், மருத்துவமனைகள் கிடைக்காமலேயே பலரும் மரணித்து வருவதாகவும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்குமான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் துளியும் அக்கறை இல்லாமல் அரசு காட்டிய மெத்தன போக்கே இந்த நிலைமைக்கு காரணம். இதை ஒரு போதும் மன்னிக்கவே முடியாது” என மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.