இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது, “புதிதாக பதவியேற்ற தமிழக அரசை செய்திவிளம்பரத்துறை அமைச்சரை திரையுலகம் சார்பில் சந்தித்து தொடர்ந்து சின்னத்திரை மற்றும் பெரிய திரை படப்பிடிப்பு நடத்துவதற்கும் போஸ்ட்புரடக்சன் பணிகள் நடைபெறுவதற்கு அனுமதி வேண்டியும் ஒட்டுமொத்த திரையுலகத்தின் சார்பாக வேண்டுகோள் விடுத்தோம். அதை கனிவுடன் பரிசீலிப்பதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்
ஆனால் கொரோனா என்கிற பெரும் தொற்று மிகவும் கடுமையாக பாதித்துள்ள சூழலில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள ஊரடங்கை தமிழ் திரையுலகமும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்கிற அதே எண்ணத்தோடு முதலமைச்சர் அறிவித்திருக்கிற ஊரடங்கில் எந்தவித படப்பிடிப்பையும் எந்தவித திரை இசை சம்பந்தமான எந்த பணியும் தொடர்ந்து செய்வதில்லை. தமிழக அரசு கொரோனா குறைந்த பிறகு, கொரோனாவின் பிடியிலிருந்து கொடிய நோயிலிருந்து விடுபடுகிற சூழ்நிலை ஏற்படுகிற போது , தமிழக அரசு அறிவிக்கிற தளர்வுகளுக்கு பிறகு எங்களுடைய பணிகள் தொடரும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக இந்த செய்தியை ஊடகங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.