‘ஓடிடி’ தளத்தில் பாலாவின் விசித்திரன்!

கடந்த 2018-ம் ஆண்டு மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா மேனன் ஆகியோரது  நடிப்பில் வெளியான படம் ‘ஜோசப்’.மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வாங்கினார்.

இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்த இத்திரைப்படத்தை மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே இயக்கியுள்ளார்.ஆர்.கே.சுரேசுடன் பூர்ணா,மதுஷாலினி உள்பட பலர் நடித்துள்ளனர்.தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை முதலில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், தற்போதைய சூழலில் இப்பட த்தை தயாரித்துள்ள இயக்குனர் பாலா விரைவில் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்து, பேச்சு வார்த்தையும் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே சொல்கிறார்கள்.