என்னை காதலிக்காவிட்டால்…நடிகை அனிகாவுக்கு மிரட்டல்!

 ’என்னை அறிந்தால்’  ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் தல  அஜித்துக்கு மகளாக நடித்திருந்தவர்நடிகை அனிகா சுரேஷ். தற்போது நன்கு வளர்ந்து விட்ட இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில்  கதாநாயகியாக களமிறங்குகிறார்.

சமீப காலமாகவே  சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக வலம்வரும்  அனிகா சுரேஷ்  அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு அவரது ரசிகர்கள்  ஆதரவும் சிலர்  எதிர்ப்பும்  தெரிவித்து வருகின்றனர்.ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வப்போது தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாவில் அவர்களுடன்  உரையாடியும் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடனான  சந்திப்பில் ஒரு ரசிகர், ’உங்களின் ரசிகர் ஒருவர், உங்களை மிகவும் தீவிரமாக  காதலிப்பதாகவும், அந்த காதலை நீஙக ஏற்க மறுத்தால்,  தற்கொலை செய்து கொள்வேன் என்றும்  மிரட்டினால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் ?  என கேள்வி எழுப்பி இருந்தார்.அவ்வளவு தான்  அவரது முகம் ஒரு நிமிடம் பயத்தில் உறைந்து போனது,

உடனடியாக சமாளித்த அனிகா படபடப்புடன்,” உண்மையில் அப்படி ஒரு நிலை எனக்கு ஏற்கனவே வந்தது. என்னை வெறித்தனமாக காதலிப்பதாக சொல்லி ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது. அதை இப்போதும் நினைத்தால்   பயத்தில் கைகால்கள் அப்படியே ஆடிப் போய விடுகிறது. எனவே அதைப்பற்றிபேசுவதை  விட்டுடுங்க… மீண்டும் அதை  ஞாபகப்படுத்த வேண்டாம்’ என்று கூறியுள்ளார். அனிகாவின் இந்த உரையாடல் வீடியோ தற்போது வைரலாக பரவி  வருகிறது.