இவ்விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் ராஜகோபாலிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அம்பலமாகி உள்ளது. மேலும் ராஜகோபாலனின் ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர் பாக நடிகர் விஷால் தனது டுவிட்டரில்,”பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை மிகவும் பயமுறுத்தியுள்ளது. அந்த பயம், இப்பள்ளி உடனடியாக மூடப்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது., பாதிக்கப்பட்ட மாணவர்களிடமோ, பெற்றோரிடமோ பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த மன்னிப்பும் கேட்கவில்லை.
இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கேட்டுக்கொள்கிறேன்.மேலும்,இதை ஒரு சாதிப்பிரச்சினையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது.
அதேசமயம் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ‘நபர்’ தூக்கிலிடப்படவேண்டும். அப்போது தான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியும். என மிகவும் ஆவேசமாக தனது கருத்தை நடிகர் விஷால் பதிவிட்டுள்ளார்.