சோசலிசம் -மம்தா பானர்ஜி திருமணம்.! சேலத்தில் வித்தியாசம்!

கொள்கை வழி வாழ்வதாக சொல்லிக்கொள்கிற அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறோம் .பெரும்பாலும் அவர்களது கொள்கை வழி என்பது கொள்ளையடிக்கும் கொள்கையாகத்தான் இருந்திருக்கிறது.

ஏழைகளாக புகுந்து கோடீஸ்வரர்களாக வாழ்ந்தவர்கள்தான் அதிகம் ,காமராஜர் ,கக்கன் ,அண்ணா ,ஜீவா ,நல்லகண்ணு போன்றோர் அரிது. 

சரி அது நாம் வாங்கி வந்த வரம். இப்போது நாம் பார்க்கப்போவது அதிசயமான கொள்கைவாதியை.!

மணமகன் சோசலிசம் மணமகள் மம்தாபானர்ஜியை திருமணம் செய்து கொள்கிறார் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்காதா என்ன? இப்படியுமா பெயர் வைக்கிறார்கள் என்கிற சந்தேகம் ஒரு நொடி வந்து போகுமா போகாதா?

சேலத்தில் ஏ .மோகன் ( 52.).இந்தியபொதுவுடமைக் கட்சியின் மாவட்ட செயலாளர்.2016 -தேர்தலில் போட்டியிட்டவர் .இவரது அப்பா,தாத்தா இருவருமே பொதுவுடமைக்கட்சி என்பதால் இவருக்கும் அந்த இயக்கத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது .இணைந்து கொண்டார்.18 ஆம் வயதிலேயே முழு நேர ஊழியர்.

சோவியத் யூனியன் பல கூறாக உடைந்து பல நாடுகளாக மாறியதால் கம்யூனிசம் செத்துப்போனதாக கூறினார்கள். இது மோகனை மனம் உடையச்செய்தது.இதனால் திருமணம் நடப்பதற்கு முன்னரேயே தனது வாரிசுகளுக்கு சித்தாந்தம் தழுவிய பெயர்களை வைப்பது என்று முடிவு செய்து விட்டார்.

அதை நடத்தியும் காட்டிவிட்டார்.

தனக்கு பிறந்த மூன்று மகன்களுக்கும் முறையே கம்யூனிசம் ,லெனினிசம் ,சோசலிசம் என்று பெயர் வைத்து விட்டார்.லெனின் ,மார்க்ஸ் என்கிற பெயர் பொதுவுடமைக்கட்சியில் சாதாரணம் .ஆனால் சோசலிசம் அரிது. 

 

முதல் மகன் கம்யூனிசம் வக்கீலாக இருக்கிறார். மற்ற இருவரும் சிறுதொழில் உற்பத்தியாளர்கள். மூவருமே பொதுவுடமைக்கட்சி. 

இரண்டாவது மகன் லெனினிசத்துக்கு கல்யாணம் நடந்து விட்டது. இவரது மகன் பெயர் மார்க்சிசம் .

தற்போது மூன்றாவது மகன் சோசலிசத்துக்கு கல்யாணம். மணமகள் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர்.மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்காக கடுமையாக பாடுபட்ட மம்தாபானர்ஜியின் பெயரை வைத்து இருக்கிறார்கள்.

இவர்களது திருமணம் மாநில பொதுவுடமைக் கட்சி செயலாளர் முத்தரசன் தலைமையில் நடந்திருக்கிறது.

 

கம்யூனிசம்சோசலிசம்மார்க்சிசம்லெனினிசம்