கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ‘ரிச்சர்ட் அந்தோணி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி ரக்ஷித் ஷெட்டி கூறும்போது, “ரிச்சர்ட் அந்தோணி உலிடவரு கண்டந்தி” எனும் திரைப்படத்தின் அடுத்த கட்டம் என்று கூட சொல்லலாம். ஆனால், இது அதைவிடவும் இன்னும் சுவாரஸ்யமானது பிரம்மாண்டமானது. பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் உலிடவரு கண்டந்தி எழுதும் போது அதற்கு அடுத்த பாகம் எடுப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எல்லாமே விதிப்படி நடக்கும் என்பதுபோல் இது குறித்தும் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் போல. இந்தக் கதை ஏற்கெனவே இருக்கும் ஒரு கதை. அதற்கான நேரம் வாய்த்தபோது அதை நான் வடித்திருக்கிறேன். அப்படித்தான் நான் இப்போது உணர்கிறேன். இதன் அடுத்தக் கட்டத்தையும் நான் எழுதுவேன். இந்த உலகம் வாஞ்சையுடன் அதற்கான வாய்ப்பை எனக்கு நல்கும் என நம்புகிறேன்.
ஹொம்பாலே நிறுவனத்துடன் இணைந்திருப்பதே மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம். எங்களின் நட்பு என்றென்றும் தொடரும் என ஆழமாக நம்புகிறேன என்று கூறியுள்ளார்.