குட்டிப்புலி,கொம்பன் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் முத்தையாஇயக்கியுள்ள புதிய படம் ‘மருது’.
இயக்குனர் முத்தையா வின் அடுத்தபடத்தினை கண்டிப்பாக எங்களது பட நிறுவனம் தான் தயாரிக்கும்.
திருட்டு விசிடியை தடுக்க நான் ஒருவன் தான் இன்றுவரை தனியாளாக போராடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய படத்திற்காக மட்டுமல்ல,எல்லா நடிகர்களுக்காகவும் தான் நான் பேசுகிறேன். மே20 ஆம் தேதி மருது வெளியாகிறது. கண்டிப்பாக திருட்டு விசிடி வெளியிடுவார்கள். நான் நிச்சயமாக என் நண்பர்களுடன் களமிறங்குவேன்.
திருட்டுவிசிடி களைக் கண்டுபிடித்தால் நிச்சயமாக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பேன்.
திருட்டு விசிடியைத் தடுக்க
அவர் பேசிய பின்னர்,பத்திரிக்கையாளர்களது கேள்விக்குப் பதிலளிக்கையில்,
தனி ஒரு ஆளாக நீங்கள் மட்டும் முயற்சி செய்கிறேன் என்று கூறுகிறீர்கள், அரசாங்கம் கடுமையான சட்டமியற்றி இதனைத் தடுக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு,அரசாங்கத்தின் சட்டம் நமக்கு உறுதுணையாகத் தான் இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர்கள் தான் முன்வரவேண்டும். அனைவரும் ஒரு குழுவாக இணைந்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்
‘மருது’ மண்மனம் மாறாத ஒரு கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் ‘மருது’. எனக்கு சென்டிமெண்ட் படங்களைத் தான் இயக்கத் தெரியும். நான் நகரம் சார்ந்த கதையமைப்பில் படம் செய்தாலும் அதிலும் சென்டிமெண்ட் இருக்கும்.
‘மருது’ கதாபாத்திரத்துக்கு விஷால் சார் மிகச்சரியாக பொருந்தி இருந்தார். அவருடைய உடல் அமைப்பும், நிறமும் இந்த கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தியது.
படத்தின் கதாநாயகி ஸ்ரீ திவ்யா. இக்கதைக்கு ஸ்ரீ திவ்யா அழகாக பொருந்தி வந்ததால் அவரை இக் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்தோம். அதுமட்டுமல்லாமல்
இசையமைப்பாளர் இமானுடன் எனக்கு முதல் படத்தில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்த படத்தின் மூலம் அது நிறைவேறி உள்ளது எனக்கு மகிழ்ச்சி. படத்தில் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது.நடிகர் சூரி, அவர் இப்படத்தில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணசித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர்,எடிட்டர், ஸ்டண்ட் மாஸ்டர்,டான்ஸ் மாஸ்டர் மற்றும் படத்தில் என்னோடு பணியாற்றிய அனைவரும் சிறப்பாக ஒத்துழைத்தார்கள். அனைவருக்கும் என் நன்றிகள். இவ்வாறு அவர் பேசினார்.
‘மருது’ படம் நடிக்கும் போதே எனக்குத் தெரிந்தது இது நிச்சமாக வெற்றிப்படமாக அமையும் என்று. அப்படிப்பட்ட ஒரு சிறப்பான கதை. நடிகர் சூரியின் எமோஷனலான நடிப்பைப் பார்த்து நான்’மெர்சலாயிட்டேன்.’ படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நிச்சயமாக ஒரு வெற்றிப்படமாக இது அமையும். இவ்வாறு அவர் பேசினார்.