அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், மிருணாளினி , மம்தா மோகன்தாஸ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்க,இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், இப் படத்தின் டீஸர் வெளியீட்டுத்தேதி குறித்து நாளை அறிவிக்க உள்ளதாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில்,தற்போது இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது டுவிட்டரில் ‘எனிமி’ படத்தின் டீஸர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும், முகமெல்லாம் ரத்தக்காயங்களுடன் விஷால் மற்றும் ஆர்யா தோன்றும் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்