இந்நிலையில்,தமிழில் இவர் நடிக்கும் புதிய படம் ஒன்றில், இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டியை நடிக்க வைக்க அப்படத்தின் இயக்குனர் முயற்சிக்க, இதை அறிந்த விஜய்சேதுபதி, “அந்த நடிகை தெலுங்கில் என்னுடன், உப்பெனா படத்தில் எனக்கு மகளாக நடித்துள்ளார்.அவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் என்னால் எப்படி நடிக்க முடியும்? எனவே எனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்க முடியாது என்றும், வேறு ஒரு நடிகையை பாருங்க” என கண்டிப்புடன் கூறிவிட்டாராம். ‘சிவாஜி- ஸ்ரீதேவி,ரஜினி-மீனா’ என உதாரணம் காட்டியும் மனிதர் ‘மசிய’ வில்லையாம்.இதையடுத்து விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை தேர்வு செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாம் படக்குழு.
இம் மாதத்தில் மட்டும் விஜய் சேதுபதி நடித்த 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. நாளை செப்டம்பர் 9 ம் தேதி லாபம் படம் திரையரங்கில் உள்ளது. செப்டம்பர் 9 ல் துக்ளக் தர்பார் நேரடியாக சன் டிவி.,யிலும், செப்டம்பர் 11 ம் தேதி நெட்ஃபிளிக்சிலும் வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து ‘அனபெல் சேதுபதி’ படம்வரும் செப்டம்பர் 17 ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.