இந்தியாவின் தலைநகரில் ஒரு பெண்ணால் பயமில்லாமல் நடமாடமுடியவில்லையா ?
அவமானம் ..அவமானம்.!
இப்படியெல்லாம் சீன் போட வேணாம். மந்திரியின் வீட்டுக்குப் பக்கத்திலேயே கைவரிசை காட்டக்கூடிய திறமைசாலிகள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள்.. சரி சொல்ல வந்த மேட்டரை சொல்லிட்டுப் போ!
நடிகை நிகிதா ராவல் பிரபலம்தான்.!புது டெல்லி சாஸ்திரி நகரில் இருக்கிற வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த இன்னோவா கார் அவரது அருகில் நின்றது. காரில் இருந்து முகமூடி அணிந்தவர்கள் அவரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அவர்களின் கையில் துப்பாக்கி அதாவது பிஸ்டல்.
நடிகை மிரண்டு போனாராம்.
அவரிடமிருந்த 7 லட்சம் ரூபாயையும் ,கட்டியிருந்த கடிகாரம் ,நகைகளை பறித்துக் கொள்ளவே அலறியபடி வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டாராம்.உயிர்ப்பயம் .
ரோட்டி அவுர் கப்டா என்கிற படம் விரைவில் வரவிருக்கிற படம்.
போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.