நடிகர்கள் : ஆர்யா, சுந்தர்.சி ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், வேல ராமமூர்த்தி, மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், யோகிபாபு, மனோபாலா, நளினி, மைனா.
இயக்கம் : சுந்தர்.சி
ஒளிப்பதிவு : யு.கே.செந்தில்குமார்,ஆஸ்தான ஒளிப்பதிவாளர்.
இசை : சி. சத்யா
தயாரிப்பு : அவ்னி சினிமேக்ஸ், பென்ஸ் மீடியா
வெளியீடு : ரெட் ஜெயன்ட் மூவீஸ்
ஜமீன்தார் சம்பத்ராஜின் ஒரே மகள் ராஷி கண்ணா. சிறுமியாக இருக்கும்போது அவள் அரண்மனையில் இருக்கும் பேயைப் பார்த்து பயந்து அப்பாவிடம் சொல்கிறாள். ஆனால், அவர் மகள் பொய் சொல்வதாக எண்ணி அவளை ஹாஸ்டலில் சேர்க்கிறார்.
பெரியவளாகி மீண்டும் அந்த அரண்மனைக்கு வரும் ராஷி கண்ணாவை அந்தப்பேய் கொல்லத் துடிக்கிறது. ஏன்? எதற்கு? என்பது தான், ‘அரண்மனை 3’ படத்தின் கதை.
சுந்தர்.சி தன்னுடைய எல்லப் படங்களிலுமே என்டர்டெயின்மென்ட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர். ‘அரண்மனை 3’ படத்தையும் ‘ஜாலியா வாங்க சந்தோஷமா போங்க’ பாணியில் தான் கொடுத்திருக்கிறார். லாஜிக்குகளுக்கு வேலை இல்லை. ஒன்லி மேஜிக் தான்! பேய் கதைகளுக்கு தமிழ் சினிமாவில் யாருக்காவது டாக்டரேட் கொடுக்க வேண்டுமென்றால் நம்ம சுந்தர்.சி.க்கு கொடுத்திடுங்க.மன்னன்யா!!
அரண்மனை படத்தின் முதல் பாகங்களை விட ‘அரண்மனை 3’ பிரம்மாண்டமாக இருக்கிறது. ‘மாயா ஜால’ கிராபிக்ஸ் காட்சிகள் ஆச்சர்யமூட்டுகிறது.. படம் பார்ப்பவர்களின் கண்கள் அகல விரிவது உறுதி. யுகே. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட்.பாகுபலி ரேஞ்சுக்கு கொண்டாடிவிட்டார்கள்.
கட்டுமஸ்தான நாயகன் ஆர்யா, சுந்தர்.சி இவர்களுடன் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், வேல ராமமூர்த்தி, மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், யோகிபாபு, மனோபாலா, நளினி, மைனா என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள். அனைவரும் சுந்தர்.சி யின் கட்டளைக்கிணங்க நடித்துள்ளனர்.சுந்தரின் கை விச்சு இல்லாமலா,அவரும் கட்டப்பா அளவுக்கு வருகிறார்.
முதலில் சற்று நிதானமாக செல்லும் திரைக்கதையானது பேயை சுந்தர்.சி. கண்டுபிடித்தவுடன் வேகமெடுக்கிறது.
க்ளைமாக்ஸில் ஹரிஹரனும், ஷங்கர் மஹாதேவனும் இணைந்து பாடும் பாடல் பெண்களையும், தெய்வ பக்தியாளர்களையும் புல்லரிக்க வைக்கும். சத்யாவின் இசையமைப்பில் ஜீவனுள்ள பாடல்! மிரட்டல் காட்சிகளில் இசையால் அலறவும் வைத்துள்ளார்.
யோகிபாபு, மனோபாலா இருவரும் சிறுவர், சிறுமிகளுக்காக காமெடி செய்கின்றனர். விவேக், மைனா இருவரும் பெரியவர்களுக்காக காமெடி செய்கின்றனர்.
கடைசியாக வரும் ராஷி கண்ணாவின் சென்சுவல் சாங்க், இளைஞர்களுக்கான போனஸ்! சிறந்த மெலடி.! அதை படமாக்கியிருக்கிற பாங்கு அருமை.
‘அரண்மனை 3’ பேய் மூலம் அலற வைத்தும், காமெடி மூலம் சிரிக்கவும் வைத்துள்ளது! வசூல் அள்ளும்.!