கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.இதில், கமலுடன் விஜய் சேதுபதி,, மலையாள நடிகர் பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஷிவானி, மைனா நந்தினிஉள்பட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இப் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.. இதையடுத்து கமல்ஹாசன் பிறந்தநாளை (7-11-2021) முன்னிட்டு இப் படத்தின் ‘க்ளான்ஸ்’ வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.