இவர் நடன இயக்குநர்கள் பிரபுதேவா, ராஜூசுந்தரத்தின் குழுவில் பணியாற்றி கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் கூல் ஜெயந்த் (வயது 52) நடன இயக்குநராக அறிமுகம் ஆனார்.
‘முஸ்தபா முஸ்தபா’, ‘கல்லூரி சாலை’ போன்ற பிரபல பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் இவர் தான். மலையாளத்தில் பேம்பூ பாய்ஸ், மயிலாட்டம், கல்யாண குரிமணம், மாயாவி என பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.தென்னிந்தியாவில் 400க்கும் மேற்பட்ட படங்களில் இடம் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலம் பன்னீர் செல்வம் நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.இவருக்கு மனைவி மற்றும் ஒருமகன்,மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை காலமானார். இன்று மாலை 4 மணிக்கு வேளச்சேரியில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது .கூல் ஜெயந்தின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.