சூர்யாவுக்காக ‘குரல்’ கொடுப்பதில் பெருமை!- நடிகர் நரேன்

 மலையாளத்தில் வெளியான   ‘ஜெய்பீம்’.  படத்தில், சூர்யாவுக்கு ‘டப்பிங்’ குரல் கொடுத்திருப்பவர் நடிகர் நரேன். இது குறித்து நடிகர் நரேன் கூறியதாவது,”  ‘மிகப் பெரிய ஸ்டாரான நடிகர் சூர்யாவுக்காக மலையாளத்தில் ‘குரல்’  கொடுப்பதில் பெருமிதமடைகிறேன்.
அவரது நடிப்பில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்ற  ‘சூரரைப்போற்று’ படத்துக்கும் நான் தான் ‘டப்பிங்’ பேசினேன். தற்போது பரபரப்பை ஏற்படுத்திவரும் ‘ஜெய்பீம்’ படத்துக்கும் டப்பிங் பேச அழைத்தபோது ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் நினைத்த மாதிரி இல்லாமல் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது.
சூர்யா சாரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மிக நுட்பமாக இருந்ததால் பிரேம் பை பிரேம் கவனித்து    பேசியது புது அனுபவமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.  அதுமட்டுமல்ல, இந்த அனுபவம் சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது.   என்கிறார்.