இப்படத்தில் ஹீரோவாக கிரண் நடிக்கிறார். இவர் ‘ எஸ் ஆர் கல்யாண மண்டபம்’ என்ற படத்தில் நடித்தவர். இந்தப் படத்தை தமிழிலும் தெலுங்கிலும் பல படங்களை இயக்கியுள்ள ஜோதி கிருஷ்ணா இயக்குகிறார்.
இதன் பாடல் பதிவு ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோ டாக்ஸ் என்ற நவீன ஸ்டுடியோவில் நடைப்பெற்று வருகிறது. பாடலை ராகுல் சிபில்குஞ்ச் பாடியுள்ளார். இவர் ராஜமௌலி இயக்கி விரைவில் வெளிவரவுள்ள ‘RRR’ படத்தில் ‘நாட்டு நாட்டு’ என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடியுள்ளார். உலகளவில் இப்போதும் டிரெண்டிங்கில் உள்ள ‘முட்ட பொம்மா’ பாடலாசிரியர் ராம்அஜோகய்யா சாஸ்திரி பாடலை எழுதியுள்ளார்.
“தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. அத்துடன் ஒரே சமயத்தில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று இந்திய அளவில் பணிபுரிவது பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது” என்கிறார் இசையமைப்பாளர் அம்ரீஷ்