தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிப் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வருபவர் லலிதா ஷோபி. இவர் கமல்ஹாசன், விஜய், சியான் விக்ரம், பிரபாஸ், ஜுனியர் என்டிஆர், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
கடந்த வருடம் லலிதா ஷோபி. நடன இயக்குநராக பணியாற்றிய `சுஃபியும் சுஜாதாயும்’ மலையாள திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பலரது பாராட்டை பெற்றது. மறைந்த நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்காக நடன இயக்குநர் லலிதா ஷோபிக்கு வழங்கப்பட்டது.இவ்விருது குறித்து லலிதா ஷோபி கூறியதாவது,, “இந்த விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநர் ஷானவாஸுக்கு நன்றி. இன்று அவர் இல்லை. அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.இப்படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. வித்தியாசமான படம். யார் மனதும் புண்படாதபடி பாடல்கள் இருந்தன. ஒட்டுமொத்த படக்குழுவினரின் உதவிதான் எனக்கு இவ்விருதைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
மரியாதை ராமண்ணா படத்தில் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர்ராஜமவுலிக்கு நன்றி. நடிகர் விஜய் என்னை அழைத்து வாழ்த்தினார். தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்து வருகிறேன். இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான்,நயன்தாரா நடிக்கும் படத்தில் பணியாற்றி வருகிறேன். பெரும்பாலான இந்திய நடிகைகளுக்கு நான் நடன இயக்குநராக பணியாற்றியது மகிழ்ச்சி. பல நடிகைகள் எனக்கு கொடுத்த பரிசுப்பொருட்களில் நடிகை அனுஷ்கா,ஜோதிகாஆகியோர் கொடுத்த வைரத்தோடுகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.
மேலும் எனக்குள்ளும் இயக்குனர் கனவு இருக்கிறது.அப்படத்துக்கான கதையை உருவாக்கி வருகிறேன் விரைவில் அது நிறைவேறும் என நினைக்கிறன்.அப்படத்துக்கான திரைக்கதையை தற்போது உருவாக்கி வருகிறேன் ” என்கிறார்.