1960-களிலேயே எம்எஸ்வி ரசிகர் மன்றத்தை மதுரையில்தொடங்கியவர் காமகோடியன் ‘மெல்லிசை மன்னர் எம்எஸ்வியும் நானும்’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.கவிஞர் காமகோடியன் எம்.எஸ்.விசுவநாதன் இளையராஜா,தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா ஆகியோரது இசையமைப்பில் பல திரைப்பட பாடல்களை இயற்றியுள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் இவர் இயற்றிய ௭ன் அன்பே ௭ன் அன்பே பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாக வலம் வருகிறது. வாழ்க்கைச் சக்கரம்,ஞான பறவை,மரிக்கொழுந்து,தேடிவந்த ராசா, கண்ணாத்தாள்
உள்பட பல திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
கவிஞர் காமகோடியன்மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இசைஞானி இளையராஜா கூறியுள்ளதாவது,”கவிஞர் காமகோடியான் அவர்கள் நேற்றிரவு உடல்நலமின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை எனக்கு “வரப்பிரசாதம்” திரைப்படத்தில் வேலைசெய்யும் போதே, தயாரிப்பு மேலாளராக பணியாற்றியதின் மூலம் நன்றாகவே தெரியும். அப்பொழுதே தனக்கு தமிழ்ப்பாடல்களை எழுதுவதில் ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார்.
அவர் நம்முடைய M.S.V அண்ணாவுடன் மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்தார். மேடை கச்சேரிகளில் கவிஞர் காமகோடியான் எழுதிய ”மனிதனாயிரு” என்ற் தனிப்பாடலை M.S.V அண்ணாவும் பாடியது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
என்னுடைய இசையமைப்பிலும் பல பாடல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். அன்னார் மறைவு நம் தமிழ்திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரைப் பிரிந்து வாடும் கவிஞரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கவிஞரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்