விஸ்வசாந்தி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் இப்படத்தில் கொலைகாரனை கண்டுபிடிக்கும் பாரன்ஸிக் ஆபீஸராக டொவீனா தாமஸ் நடித்திருக்கிறார். இவருடன் மம்தா மோகன் தாஸ, ரெபா மோனிகா, மோகன் சர்மா, பிரதாப்போத்தன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
அனஸ்கான் – அகில்பால் என்ற இரட்டை இயக்குனர்கள் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளனர்.இப்படத்தின் வசனத்தை ஏ.ஆர், கே. ராஜராஜா எழுத,ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ் கவனிக்க,ஜேக்ஸ் பிஜோயி இசையமைத்துள்ளார்.
எஸ்,சந்திரசேகர் இப்படத்தின் இணைத்தயாரிப்பை ஏற்றுள்ளார்.இப்படம் குறித்து வசனகர்த்தா ஏ.ஆர், கே. ராஜராஜா கூறியதாவது,”வரிசையாக பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது. அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார்.
மெல்ல மெல்ல அந்த போலீஸ் துறையை நம்ப வைத்து அந்த கொலைகாரனை எப்படி பிடிக்கிறான் என்பது கதை. இப்படத்திற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஹாலிவுட் தரத்திற்குகொண்டு செல்கிறது.
திரில்லர் என்றால் இதுதான் என்று ஒவ்வொரு காட்சிகளும் நெஞ்சை அள்ளிக் கொள்ளும் விதமாக ‘கடைசி நொடிகள்’ உள்ளது.என்கிறார்.