‘விதார்த்துக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம்.அதற்கான தீவிர முயற்சியில் இருப்பவரின் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது அதிலிருந்து மீண்டாரா இலட்சியத்தை அடைந்தாரா என்பதுதான் கதை.
ஒரு இரவு விதார்த்துக்கு கனவு வருகிறது.அந்தக் கனவில் விதார்த்தின் அப்பாவுக்கு கார் ஆக்சிடென்ட் நடக்கிறது.இது வெறும் கனவுதானே என்று நினைக்கும் விதார்த் வாழ்வில் அடுத்தநாளே அப்படியொரு சம்பவம் நடக்கிறது. கனவில் பார்த்தமாதிரியே ஆக்சிடெண்ட் நடக்கும் இடம்,கார் எல்லாமே ஒரே மாதிரி இருக்கிறது. அப்பாவின் உயிரைக் காப்பாற்ற தேவையான பணமும் இல்லாமல்,விபத்து ஏற்படுத்திய நபரின் முகம் தெரியாமல் அவர் படும் பாடுதான் ‘கார்பன்’
பெரும்பாலும் இரவில் நடக்கிற கதை.ஐம்பதுக்கும் மேற்பட்ட லொகேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கும்.
இந்தப்படத்தில் தான்யா பாலகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தவிர,இயக்குனர் மாரிமுத்து, மூணாறு ரமேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, ராம்சன் வினோத் சாகர், டவுட் செந்தில், பேபி ஜானு பிரகாஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.