சமீபத்தில் நார்வே திரைப்பட விழாவில் இத் திரைப்படம் நான்கு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
முழுக்க முழுக்க தமிழ்ப் படங்கள் மட்டுமே பங்கேற்கும் ‘நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனராக வெங்கட்பிரபு, சிறந்த இசையமைப்பாளராக யுவன்சங்கர் ராஜா, சிறந்த வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிறந்த படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல் என நான்கு விருதுகளை தட்டி சென்றுள்ளார்கள்..
இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரனுக்கு அவரது இத்தனை ஆண்டுகால கலைச்சேவையை பாராட்டி கலைச்சிகரம் விருதும் வழங்கப்பட்டுள்ளது.