மகளுக்கு ‘தமிழ்’ கற்றுக் கொடுக்கும் கன்னட ‘சூப்பர்’ஹீரோ!

கேஜிஎஃப்“ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகராக மாறிப்போனவர் கன்னட நடிகர் யஷ்.இவர் கடந்த 2016 ல் கன்னட நடிகை ராதிகா பண்டிட்டை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு அய்ரா எனும் பெண் குழந்தையும்,யாதர்வ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர் . இதில் அய்ரா ஏற்கனவே மீடியாக்களில் தனது சுட்டித்தனமான க்யூட் சேட்டைகளால்  பிரபலமானவர்.

இந்நிலையில்,நடிகர் யஷ் தனது செல்ல மகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.தனது அப்பாவின்மடியில் அமர்ந்து குழந்தை அய்ரா தமிழ் உயிரெழுத்துகளை அச்சுப் பிசகாமல் சொல்லி நம்மையும் ஆச்சர்யப்படுத்துகிறார்