இப் படத்தை தொடர்ந்து விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். இப்படத்தின் மூலம் முதன்முறையாக தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகவிருக்கிறார் விஜய். தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிய பட்ஜெட் படமாக இப்படம் உருவாக உள்ளது.
இப்படத்தில் ‘எரோட்டோமேனியா’ என்ற வித்தியாசமான மன நோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்றும்,இதில் விஜய்யுடன் முன்னணி தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் இணைந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இசையமைப்பாளராக தமனும், நாயகியாக ராஷ்மிகாமந்தனாவும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தாலும் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கபட உள்ளதாக தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.