திரைப்பட பின்னணிப் பாடகி வினைத்தா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாடகி வினைத்தா பிரேம்ஜி அமரனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு “உன் கண்களில், நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி, நான் என் கைகளுக்கு இடையில் இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன்” என பதிவிட்டு இருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள்பலரும்,பிரேம்ஜி கடைசியில் கமிட் ஆகிட்டாரா என கேட்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்துபிரேம்ஜி அமரன் கூறியுள்ளதாவது “இது பொய்ச் செய்தி நான் மொரட்டு சிங்கிள் தான்!, பிபிசி யில நான் கமிட்டட்னு நியூஸ் வந்தா கூட நம்பாதீங்க. நான் எப்பவுமே சிங்கிளா இருக்க போறேன். பிரண்ட்ஸ் கூட போட்ற போட்டோவை வச்சு Fake News போட்றாங்க” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.