தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதையடுத்து கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம்,வரும் 16 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களிலும் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உள் அரங்குகளில் கருத்தரங்கு, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு 100% பார்வையாளர்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.