பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மாமன்னன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் 15வது படமாகும்.
இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.இவர்களுடன் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்
மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் – ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய முவரும் முதன் முறையாக இணையும் இப்படம் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
.தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகர் நடிகைகள் பலர் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு முதல் சென்னையில் தொடங்கியுள்ளது.