இந்நிலையில் இன்று தனுசின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் தனது பிறந்த நாளை கொண்டாடினார் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில்,ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் செல்வராகவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தாக ” எனது குரு, நண்பர், மற்றும் எனக்கு அப்பா போன்றவர் செல்வராகவன் அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், தனுஷ் ஐஸ்வர்யா இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு இருந்து வந்தாலும் செல்வராகவனுக்கு ஐஸ்வர்யா வாழ்த்து சொல்லியிருப்பது தனுஷ் குடும்பத்தின் மீது ஐஸ்வரியா வைத்திருக்கும் மரியாதையையே இது காட்டுகிறது தனுஷுடன் விரைவில் ஐஸ்வர்யா இணைவார் என்று நம்பிக்கை தெரிகிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.