டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரும் ஏப்ரல் 1, 2022 அன்று வெளியிடத்பிரபல நடிகர் ஷ்ரேயஸ் தல்படே இந்த எழுச்சியூட்டும் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். கிரிக்கெட் மீது கொண்டுள்ள காதலை நிரூபிக்க கண்களில் கனவுகளோடு 41 வயதில் ராஜஸ்தான்
ராயல்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய லெக் ஸ்பின்னரின் வாழ்க்கை மற்றும்
ஆர்வத்தைப் பற்றிய தனித்துவமான, அனைவரையும் ஈர்க்கும் இத்திரைப்படம்
கிரிக்கெட்டைப் போலவே டைனமிக்காக, வேடிக்கையாக, சவாலானதாக மற்றும்
சிலிர்ப்பு ஏற்படுத்துவதாக இருக்கும். இதில் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்பிரதா
சாட்டர்ஜி மற்றும் அஞ்சலி பாட்டீல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் குறித்து கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பே கூறுகையில், “எனது கதை பலரை ஊக்குவித்துள்ளது என்பதையும் இப்போது திரைப்படமாக உருவாக உள்ளது என்பதையும் அறிவது மகிழ்ச்சி தருகிறது. சூழல் அப்படி இருந்தாலும் மனம் தளராமல் தன் திறனைக் குறைத்து மதிப்பிடாமல் தங்கள் கனவுகளை எட்டும் உத்வேகத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதே என் ஒரே விருப்பம். எனது கதை திரைப்படமாக வருவதை எனது குடும்பத்தினரும் அன்புக்குரியவர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர், அந்நாள் எனக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்!; என்கிறார்.
“இக்பால் படத்தில் நாயகனாக நடித்து 17 வருடங்களுக்குப் பின்னர் இப்போது
பிரவீனாக நடித்ததை மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்தப் பாத்திரமும்
கதையும் எனக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிட்டும் வாய்ப்பை வழங்கியது
மற்றும் படப்பிடிப்பின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மிகவும் ரசித்தேன். பூட்ரூம்
ஸ்போர்ட்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் இந்தப் பாத்திரத்தில்
என்னைக் கற்பனை செய்த எங்கள் திறமையான இயக்குனர் ஜெய்ப்ராத்
ஆகியோருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பிரவீனைப்பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்குப் பெருமை சேர்க்கும் ஒன்று மற்றும்
அர்ப்பணிப்பும் பெருமுயற்சியும் தேவைப்படும் இந்தப் பாத்திரத்திற்காக அவருடன்
செலவழித்த நேரத்தை நான் எப்போதும் பொக்கிஷமாகக் கருதுவேன். எங்கள்
பார்வையாளர்கள் படத்தை ரசிப்பது மட்டுமல்லாமல், மனதைத் தொடும் இப்படத்தால்
ஈர்க்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். என்கிறார்.