மாலத்தீவில் தமன்னாவின் ஐஸ்வண்டி அட்டகாசம்! 

அழகுக் குவியலின் உருவமாய் இருக்கும் மாலத்தீவில் தனது தேனிலவை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வாலைத் தொடர்ந்து, இந்திய நடிகைகளின் ‘திடீர்’ உல்லாசபுரியாக மாறியுள்ள மாலத்தீவிற்கு ரகுல் ப்ரீத் சிங், சமந்தா, டாப்ஸி,ஆண்ட்ரியா,சோனாக்‌ஷி சின்ஹா, பிரணிதா,ஐஸ்வர்யா ராஜேஷ்,ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர், கரீனா கபூர், சாரா அலிகான், கியாரா அத்வானி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அழகான மாலத்தீவின் அழகோடு நடிகைகளின் பேரழகு புகைப்படங்கள் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு  நம்மை மலைக்க வைக்கின்றன.இந்நிலையில்,பான் இந்தியா நடிகையாக சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா தற்போது மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு ஒரு ஐஸ் வண்டியை ஓட்டிக்கொண்டு செம ஜாலியாக ஊர் சுற்றி வருவது போலவும்,. மேலும் விதவிதமான கலர்,கலரான கவர்ச்சி உடைகளில்  புகைப்படங்களை எடுத்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

மாலத்தீவு கடற்கரையில் இவர் எடுத்துக்கொண்ட  புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.15 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள தமன்னாவின் மாலத்தீவு புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.