இந்நிலையில் மருத்துவர்களின் அறிவுரையின் படி மேல் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து தனி விமானத்தில் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாட்டினை நடிகர் டி.ஆர்.சிலம்பரசன் செய்து வருகிறார்.
முன்னதாக சிங்கப்பூர் செல்வதாக இருந்த நிலையில் அமெரிக்க செல்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
டி.ராஜேந்தருடன் அவரது குடும்பத்தினரும் செல்ல இருக்கின்றனர்.
டி.ராஜேந்தர் பூரண நலம் பெற அவரது ரசிகர்களும் சிலம்பரசன் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.