மிஸ் தமிழ்நாடு 2021 மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2021 பட்டங்கள் வென்ற தச்சானி இந்த பாடலில் நடித்துள்ளார். ஆத்மார்த்தமான இந்த பாடலுக்கு ஏ கே சசிதரன் இசையமைத்துள்ளார். வி.மணிகண்டனுடன் விளம்பரங்களில் அசோசியேட்டாக இருக்கும் லெனின் இந்தப் பாடலின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
பாடலுக்கான நடனத்தை சாலமன் வடிவமைத்துள்ளார். பாடலின் வரிகளை பகவதி பி கே எழுதியுள்ளார்.