கோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட ஏராளமான படங்களில் நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு “ எதிர் கொள் “ என்று பெயரிட்டுள்ளனர்.
கதாயாககியாக மேக்னா நடிக்கிறார். மற்றும் தென்னவன், சார்மிளா, காளிவெங்கட், அஜெய், சிவசங்கர், கண்ணன் பொன்னையா, விஜய்கணேஷ், அகிலேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.இப்படத்தின்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ஆர்.அய்யனார்
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…
இது,முழுக்க முழுக்க கிராமத்து கதை !
பொறுப்பில்லதவனாக கருதப் பட்ட மகன் ஒரு கட்டத்தில் எப்படி உயர்ந்தவனாகிறான் என்கிற உயரிய கருத்தை சொல்கிறோம்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும் விழுப்புரம், செஞ்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றாகிர் இயக்குனர் ஆர்.அய்யனார்.
ஒளிப்பதிவு – பாண்டி அருணாசலம்.
இசை – ஜூட் லினிக்கர்.