புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் அர்ணவ் என்ற பெயரில் தற்போது விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ‘செல்லம்மா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.திவ்யா ஏற்கனவே முதல் கணவரை பிரிந்த நிலையில், நடிகை திவ்யாவுக்கும் நடிகர் அர்ணவுக்கும் காதல் ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து, இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், நடிகை திவ்யா தனது கணவர் அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக விடியோ வெளியிட்டதால் சின்னத்திரை வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
சீரியல் நடிகை திவ்யா, கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் இருந்த அர்ணவையும் வீட்டுச் செலவுகளையும் தானே பார்த்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இருந்தாலும், அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ணவ் தரப்பில் இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அர்ணவ், ஆவடி காவல் ஆணையரகத்தில் திவ்யா மீது புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் இதை மறுத்துள்ள சீரியல் நடிகை ஒருவருடன் அர்னவுக்கு இருந்த தொடர்பு பற்றி கேட்டதால் தான் இப்படியொரு பிரச்சனையை கிளப்பி உள்ளார் என திவ்யா கூறியுள்ளார். தனது வயிற்றில் குழந்தை இருந்த நிலையில், அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தினார் என அவர் கொடுத்த புகார் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில், நள்ளிரவில் வீட்டுக்கதவை தட்டி தொல்லை கொடுத்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை விசாரித்த ஆவடி போலீஸார் அர்னவ் மீது பெண் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இதையடுத்து இந்த வழக்கை தீவிரமாக போலீஸார் விசாரித்து வரும் சூழலில் நடிகை திவ்யா தரப்பின் வாக்குமூலத்தையும் அர்னவ் தரப்பு வாக்குமூலத்தையும் கேட்டு வருகின்றனர். வன்கொடுமை சட்டம் அர்னவ் மீது பாய்ந்துள்ள நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது இவ்விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.