Joker, Tamil Movie Review
Director: Raju Murugan
Music director: Sean Roldan
Screenplay: Raju Murugan
Cast: Guru Somasundaram, Bava Chelladurai, Ramasamy, Gayathri, Ramya Pandiyan.RATING;4/5.
அரசியல்,பணபலம்,அதிகாரம் படைத்தவர்களைத் தவிர, சாமானிய மக்களுக்கு எந்த ஒரு நீதியும் கிடைப்பதில்லை,எந்த ஒரு திட்டமும் அவர்களை சென்றடைவதில்லை அப்படி ஒரு சாமானியனின் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை கச்சிதமாக படமாக்கியிருப்பதோடு, மணல் கொள்ளை, கல்விக்கொள்ளை, அரசாங்கம், அரசு ஊழியர்கள், அரசியல்கட்சிகள், என அனைத்து ஊழல்வாதிகள், மக்களை சுரண்டுபவர்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர்.அரசியல் கூட்டங்களுக்கு ஆள் பிடிப்பது, இன்றைய காலகட்ட குக்கிராமங்களின் நிலை, மக்கள் நலத் திட்டங் களின் நிஜ முகம் என எதார்த்தமாகக்
காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. காதல் அத்தியாயம் இயல்பாகவும் அழகாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.குருசோமசுந்தரம் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார். காதலியைப் பின்தொடர்வது, மனம் பிறழ்ந்த நிலையில் ஜனாதிபதியாக அதிகார தோரணை காட்டுவது, நீதிமன்றத்தில் கதறுவது என முகபாவனை,மற்றும் பாடி லாங்குவேஜில் வெளுத்து கட்டியிருக்கிறார்.
ஏழைப் பெண்ணாக வரும் ரம்யா பாண்டியன், நாயகனின் தோற்றத்தைப் பார்த்து முதலில் விலகுவதும், பிறகு அவரது கள்ளமில்லா உள்ளத்தின்அன்பில் கரைவதுமாக இயல்பாக நடித்திருக்கிறார்.மு.ராமசாமி எதற்கெடுத்தாலும் வழக்கு போடுவது, மேலும் காயத்ரி கிருஷ்ணா அனைத்தையும் முக நூலில் போட்டுவிடுவது என படத்தின் முதல் பாதி மிகவும் கலகலப்பாக நகர்கிறது. கிளைமாக்சில் நீதிமன்றத்தில் சோமசுந்தரம் தன இயலாமையை நினைத்து குமுறும் காட்சி ரசிக்க வைக்கிறது. ‘சகாயம் பண்ணுங்கனு சொல்லலை… சகாயம் மாதிரி பண்ணுங்க’னுதான் சொல்றோம்!’, ‘இந்த நாட்டுல வாழ்றதுதான் கஷ்டம்னு பார்த்தா… இப்போ பேள்றதையும் கஷ்டமாக்கிட்டாங்களே..!’, ’குண்டு வைக்கிறவனை எல்லாம் விட்டுருங்க, உண்டகட்டி வாங்கி திண்ணுட்டு கோயில்ல தூங்குறவன பிடிங்க’, ’உழைக்கிறவன் வண்டியத் தான போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வெச்சுக்கும்? எந்த ஸ்டேசன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா?’ – குடியானவனின் வீட்டுக் கழிப்பறைகளிலிருந்து கோடிகளைக் கொள்ளையடித்துக் கொண்டு ‘கக்கூஸ் கட்டுன காசு நாறாது’ ‘இப்போலாம் ஹீரோவை விட வில்லனைத் தானே இந்த சனங்களுக்குப் பிடிக்குது’, ‘உங்களுக்காகப் போராடுற எங்களைப் பார்த்தா பைத்தியக்காரன்னு தோணினா, அது எங்க தப்பில்ல!’என சாமான்யனின் மனசாட்சியையும் உலுக்கும் வசனங்கள்.ராஜூ முருகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இப்படம் வரவேற்கப்பட்டால் தமிழ் சினிமாஉலக அரங்கில் கம்பீரமாக தலை நிமிரும். ‘
.