சினிமாத்துறையில் உண்மையான காதலா?- சர்ச்சையை கிளப்பிய கங்கனா !


சர்ச்சைக்குரிய வகையில் பேசி அடிக்கடி பிரச்சனையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ள நடிகை  கங்கனாவை, பாலிவுட்டில் சர்ச்சை நாயகி என்றே பலரும் அழைத்து வருகின்றனர்.

பிஸியாக நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும்  கங்கனா ரனாவத் தொடர்ந்து சில சர்ச்சை கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு  வந்ததால், அவரின் ட்விட்டர் கணக்கு கடந்த 2021ம் ஆண்டு முடக்கப்பட்டது.

தற்போது ட்விட்டர் கணக்கு இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,  நடிகர்  சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் திருமண வீடியோவைப் பகிர்ந்து அவர்களின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது, “இந்த காதல் ஜோடி எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

சினிமா துறையில் உண்மையான காதலை பார்ப்பதே மிகவும் அரிதான ஒன்று. இவர்களை ஒன்றாக பார்ப்பதற்கு தெய்வீகமாக உள்ளது என்று பதிவிட்டு, தீய கண் ஈமோஜியையும் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் சினிமா துறையில் உண்மையான காதல் இல்லையா? என்றும், கங்கனா மறைமுகமாக பல பாலிவுட் நடிகர்களை தாக்கி  பதிவிட்டுள்ளதாகவும்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.