திரில்லர் கதையாக உருவாகி வரும் இப்படத்தில், லாவண்யா திரிபாதி கதாநாயகியாகவும், அஷ்வின் காக்குமானு எதிர்மறையான கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா, பரத், தௌபிக், சர்வா, பிரதீப் விஜயன் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாகும் படம்தான் ‘தணல்’.என்கிறார் இயக்குனர் ரவீந்திர மாதவா.இப் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.
இப்படத்தின் ஆடியோ, டிரைலர் மற்றும் திரையரங்குகளில் படம் வெளியாகும் தேதி போன்றவை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்கிறது படக்குழு.இப்படத்தின் ஒளிப்பதிவை .சக்தி சரவணன்,கவனிக்க,ஜஸ்டின் பிரபாகரன்,இசையமைத்து வருகிறார்.