கேஜிஎஃப் பாணியில் பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரேயா சரண் பேசுகையில்,, ”சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். நல்ல அழகான நினைவுகள் இங்கு இருக்கிறது. கப்ஜா கதையை இயக்குனர் சொல்லும் போதே ரொம்ப நல்லா இருந்தது.தற்போது வெளியாகியுள்ள இந்த ‘நமாமி’ பாடல் எடுக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. காரணம் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. ஆனாலும் பாடல் நன்றாக வந்துள்ளது.
என்னை அழகாகக் காண்பித்த ஒளிப்பதிவாளருக்கு நன்றி. நானும் இது போன்ற படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்தப் பாடல் சிவராத்திரி ஸ்பெஷலாக இருக்கும். பான் இந்தியா படம் என்பது ரொம்ப நல்ல விஷயம். வெற்றிக்கு மொழி என்பது முக்கியமல்ல. இந்தப் படத்தில் எல்லாரும் கடினமாக உழைத்திருக்கிறோம்.
ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பிறகு தமிழில் நடிப்பதே இல்லையே என கேட்கிறார்கள்.தமிழில் நல்ல கதைகளும் வாய்ப்பும் அமைந்தால் நடிக்க தயாராகவே இருக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்