தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில்,.நடிகர் தனுஷ்,தற்போது, கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்திலும் புதிய படமொன்றில் கமிட் ஆகியுள்ளார்.இந்நிலையில் நடிகர்.தனுஷ், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டி வந்தார்.
ரூ. 150 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான வீட்டில் தற்போது தனுஷ் தனது அம்மா, அப்பாவுடன் குடியேறியுள்ளார். இந்த வீடு கட்டும் பிரச்சனையில் தான் தனுஷுக்கு பண நெருக்கடி ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி விவாகரத்து வரை சென்றதாக கூறப்படுகிறது.
புதுமனை புகு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குநர் சுப்பிரமணியம் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,அதற்கு கேப்ஷனாக ” தம்பி தனுஷின் புதிய வீடு, கோவில் உணர்வு எனக்கு.. வாழும் போதே தாய், தந்தையை சொர்க்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள், தெய்வமாக உணரப்படுகிறார்கள்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.