‘கண்ணை நம்பாதே’: ‘க்ரைம்’ பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் உதயநிதி!

‘கலகத் தலைவன்’ படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகவுள்ள புதிய படம், ‘கண்ணை நம்பாதே’  லிப்பி சினி கிராப்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் பூமிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த் மற்றும் சுபிக்ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப் படத்திற்கு ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளரான ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்
 இப்படத்தை எழுதி இயக்கியுள்ள மு,மாறன் கூறுகையில்,”இரண்டு நாள்ல நடக்கிற கிரைம் திரில்லராக உருவாகியுள்ள கதைதான் ‘கண்ணை நம்பாதே’ படம்.இதில் உதயநிதி கம்யூட்டர் கிராபிக்ஸ்  நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞராக வருகிறார்.
முழுக்க முழுக்க சென்னையில் நடக்கும் கதை இது.  ஒரு கிரைம் பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் உதயநிதி, அதில் இருந்து எப்படி வெளியே வருகிறார் என்பது தான் இதன் திரில்லர் திரைக்கதை. ஆனால் அதை தாண்டி இதில் அழகான காதலும் இருக்கிறது. எதையும் சட்னு நம்புற இடத்தில் நாம் இருக்கோம். கெட்டதுனு நினைக்கிற எல்லாமும் கெட்டது இல்லை. நல்லதுனு முடிவுக்கு வர்ற விஷயமும் அப்படியில்லை.எந்த ஒரு விஷயத்தையும்  செய்யும்போதும் யோசிக்கணும்.
அப்படி செய்யாத விதத்தில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதை சொல்லும் படமாக ரசிகர்களை இருக்கை நுனியில் அமர செய்யும் படமாக இருக்கும் இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் இரவில் நடப்பவை யாக தான் இருக்கும்.  முதல் பாதி ஒரு நாளிலும்,இரண்டாம் பாதி அடுத்த நாளிலும் நடப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது . என்கிறார்.