சித்தார்த்தின் பிறந்தநாளில் வெளியான ‘டக்கர்’ க்ளிம்ப்ஸ்!

 

நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கர்’ திரைப்படம் வரும் மே 26, 2023 அன்று வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இப்படத்தில் சித்தார்த், யோகிபாபு, திவ்யான்ஷா, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் டக்கரில் நடித்துள்ளனர் இந்நிலையில் நாயகன் த்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் க்ளிம்ப்ஸையும் இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

அடுத்த தலைமுறையை ஈர்க்கும் வகையில் காதல், எமோஷன் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுடனும் இளமை துள்ளலுடனும் பார்வையாளர்களைநிச்சயம் இப்படம் கவரும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர்


’டக்கர்’ தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் எழுதி இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார்.